முகப்பு
செய்திகள்

கேம் சேஞ்சர் டீசர் தேதி!

கேம் சேஞ்சர் அப்டேட்...

Updated On : 31 அக்டோபர், 2024 at 4:22 PM
பகிர்:

நடிகர் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமன் இசையமைப்பில் உருவான இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இந்தியன் - 2 தோல்விக்குப் பின் கேம் சேஞ்சர் மூலம் ஷங்கர் மீண்டு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், படத்தின் டீசர் நவ. 9 ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.