ஆண்ட்ரியா. 
செய்திகள்

நோ கமண்ட்ஸ்! ஹேமா கமிட்டி அறிக்கையைப் பேச மறுத்த ஆண்ட்ரியா!

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேச நடிகை ஆண்ட்ரியா மறுப்பு.

DIN

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ஆண்ட்ரியா பேச மறுத்துவிட்டார்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான அனல்மேல் பனித்துளி கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

தற்போது, கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, நடிகர் கவினுடன் மாஸ்க் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஆண்ட்ரியா.


அடிக்கடி கல்லூரி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரிகளையும் நடத்தி எப்போதும் வெளிச்சத்திலே இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது பயணங்களையும் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், தனியார் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாத்துறையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு ஆண்ட்ரியா, ‘நோ கமண்ட்ஸ். என்னிடம் அதைக் கேட்க வேண்டாம்’ எனப் பதிலளித்தார். கடை திறப்பு விழாவில் இதைப்பற்றிக் கேட்டதால் கேள்வியை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

ஆண்ட்ரியா மலையாளத்தில் அன்னயும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT