முகப்பு
செய்திகள்

வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமும் மேலோங்கும் வாழை திரைப்படம்!

வாழை திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

Updated On : 3 செப்டம்பர், 2024 at 7:34 PM
பகிர்:
Updated On : 3 செப்டம்பர், 2024 at 7:20 PM

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் கடந்த ஆக.23இல் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.

வாழை திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக சில விமர்சனங்களும் வருகின்றன.

Advertisement

முகநூலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நபர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

Updated On : 3 செப்டம்பர், 2024 at 7:23 PM

அந்தப்பதிவில் இருப்பதாவது:

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளும் பேசி புகழ்ந்து வருகின்றனர். நானும் வாழை படத்தை பார்த்தேன். உண்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது என இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் சம்பவம் நடைபெறும்போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில் இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும்போது அந்த லாரியின் ஓட்டுநர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும்தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார்.

அந்த ஓட்டுநர் பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு.

Updated On : 3 செப்டம்பர், 2024 at 7:23 PM

பிறகுதான் இரவோடு இரவாக ஆட்சியர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர். ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர், தேவர் இன மக்கள் வந்து இருந்தனர். இவர்கள் உதவியையும் உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைப்பற்றி கொஞ்சம்கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார்.

உண்மை சம்பவமென்றால் உண்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும். ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குநர் என்று எப்படி கூற முடியும்? மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குநர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இன்று அடையாளம் காணமல் போயிவிட்டனர். அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது. இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்தச் செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.

ஆக்கம்,பேட்மா ஃபாரூக், பேட்மாநகரம் தூத்துக்குடி மாவட்டம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.