செய்திகள்

கேம் சேஞ்சர் புதிய அப்டேட்!

ஷங்கர் - ராம் சரண் படத்தின் அப்டேட்...

DIN

நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.தற்போது, டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தமன் இசையமைப்பில் உருவான முதல்பாடலான ஜரகண்டி பாடல் வெளியாகி கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் அளிப்பு

SCROLL FOR NEXT