முகப்பு
செய்திகள்

மெய்யழகன் கிளர்வோட்டம் (டீசர்)!

மெய்யழகன் படத்தின் டீசர்...

Updated On : 7 செப்டம்பர் 2024, 6:14 pm IST
கார்த்தி, அரவிந்த் சுவாமி.
பகிர்:

கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மெய்யழகன் படத்தில் கமல்ஹாசன் பாடிய விடியோ வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் செப்.27 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. தொடர்ந்து, இசைத்தளங்கள் மற்றும் யூடியூபில் பாடல்கள் வெளியாகின.

அதில், ’நான் போகிறேன்’ மற்றும் ’யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இந்த நிலையில், படத்தின் டீசரை இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர். டீசரை தமிழில் கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.