முகப்பு
செய்திகள்

விஜய்யின் பெருந்தன்மை..! சிவகார்த்திகேயனின் நீக்கப்பட்ட காட்சிகள்... மனம் திறந்த வெங்கட் பிரபு!

சிவகார்த்திகேயன் நடித்து நீக்கப்பட்ட சில காட்சிகள் விரைவில் வெளியாகுமென இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Updated On : 7 செப்டம்பர் 2024, 1:30 pm IST
விஜய், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு. - கோப்புப் படங்கள்.
பகிர்:

லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் செப்.5ஆம் தேதி 4,000 திரைகளில் வெளியானது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். அதில் ஒருவர் சிவகார்த்திகேயன். வளர்ந்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து விஜய்யின் இடத்தைப் பிடிப்பார் என பலரும் கூறுகிறார்கள்.

இந்தக் கருத்தை கோட் படத்தில் உவமையாக வைத்து சில காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இது குறித்து நேர்காணல் ஒன்றில் இது குறித்து வெங்கட் பிரபு கூறியதாவது:

விஜய்யின் பெருந்தன்மை

தொடக்கத்தில் சில வசனங்கள் வேறு மாதிரி இருந்தன. ஆனால், விஜய்சார் கூடுதலாக இந்தாங்கா சிவா, இந்தத் துப்பாக்கியைப் பிடிங்க. நிறைய பேரோட உயிர் உங்ககைல இருக்கு.. என்று சொல்லுவார். துப்பாக்கி விஜய் சார் படம். இதைச் சொல்லுவதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும்.

சிவகார்த்திகேயனும் நீ்ங்கள் இதைவிட முக்கியமான ஒரு இடத்துக்கு போவது பற்றி பேசுவார். விஜய்யும் அதற்கு ஓக்கே சொல்லிவிட்டு செல்லுவார்.

நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் காட்சிகள்

சிவகார்த்திகேயன் மோகன் காட்சிகள் இருக்கின்றன. அது சுவாரசியமான காட்சிகள். ஆனால், படத்தின் நீளம் கருதி அது படத்தில் நீக்கப்பட்டன. விரைவில் நீக்கப்பட்ட காட்சிகளில் வெளியிடுவேன் என்றார்.

இந்தப் படம் உலகளவில் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.