அமரன் டப்பிங் பணிகள் நிறைவு! தீபாவளிக்கு ரிலீஸ்!
அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்தன.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகுமென படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அடுத்த வாரம் (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்!
இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் டப்பிங் பேசும் விடியோவை பகிர்ந்து டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் விடியோ வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.