மெட்ராஸ்காரன் முதல் பாடல் 
செய்திகள்

மெட்ராஸ்காரன்: முதல் பாடல் அறிவிப்பு!

நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ்காரன் படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

DIN

எஸ் ஆர் புரடக்‌ஷன் சார்பில் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் தெலுங்கு நாயகி நிஹாரிகா கொனிடேலா இணைந்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் சிஎஸ் விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்தப் படத்தின் முதல்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதன் புரோமா வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT