FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வேட்டையன்: மஞ்சு வாரியர் கதாபாத்திர அறிமுக விடியோ!

வேட்டையன் படத்தில் நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 17 செப்டம்பர் 2024, 5:24 pm IST
வேட்டையன் படத்தில் நடிகை மஞ்சு வாரியர்.
பகிர்:

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேற்று, துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments