FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மஞ்சு வாரியர் தொடுத்த அவதூறு வழக்கு..! இயக்குநர் சனல் குமார் சசிதரனுக்கு சம்மன்!

கேரள நடிகை மஞ்சு வாரியர் இயக்குநர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து...

20 செப்டம்பர் 2026, 6:43 pm IST
சனல் குமார் சசிதரன், மஞ்சு வாரியர் - படம்: இன்ஸ்டா / சனல் குமார் சசிதரன், மஞ்சு வாரியர்
பகிர்:

கேரள நடிகை மஞ்சு வாரியர் (48 வயது), கேரள அரசின் மாநில விருது, தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் சனல் குமார் சசிதரன் (49 வயது) மீது அவதூறு வழக்குப் பதிந்துள்ளார்.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், இயக்குநர் சனல் குமார், ஊடகவியலாளர் ஷாஜகான் சக்காரியா மற்றும் முகநூல், மெட்டா கம்பெனி மீதும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளத்தின் நட்சத்திர நடிகை மஞ்சு வாரியார் கடந்த 2024ல் தான் மிரட்டப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் இயக்குநர் சனல் குமார் சசிதரன் மீது அளித்த புகாரினால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியானார்.

Advertisement

Advertisement

பிணையில் வெளியான சனல் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் மஞ்சு வாரியர் குறித்து தொடர்ச்சியான பதிவுகளைப் பதிவிட்டு வந்தார். அதில் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரது மேலாளரைக் குற்றம் சுமத்தியும் பதிவிட்டுருந்தார்.

அதுமட்டுமின்றி, நடிகையுடன் தான் உறவில் இருந்ததாகவும் சனல் குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை மறைக்கவே மஞ்சு வாரியர் யாரோ சொல்லி இதெல்லாம் செய்து வருகிறார் எனவும் ஆடியோ, விடியோ, எழுத்து மூலமாகவும் பல பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்.

மஞ்சு வாரியர் அளித்த அவதூறு வழக்கில் தன்னைப் பற்றிய மோசமான, உண்மைக்குப் புறம்பான பதிவுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியரை கதாநாயகியாக வைத்து சனல் குமார் சசிதரன் கயாட்டம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படப்பிடிப்பின் போது தான் தொழில்முறையில் மட்டுமே பழகியதாக அந்த மனுவில் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் இதுவரை திரையரங்கில் வெளியாகவில்லை. ஆனால், சனல் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் கூகுள் டிரைவில் இந்தப் படத்தை 2025, ஜன.23ல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர் அளித்த மனுவில் சனல் குமார் தொடர்ச்சியாக தன்னை குறுஞ்செய்திகள், அழைப்பேசி வழியாக தொல்லைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

சனல் குமாரின் செயல்கள் தனக்கு அவமதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அதனால், சட்டப்படி நடவடிக்கை தேவை எனக் கூறியுள்ளார். முன்னர் பதிவிட்ட வழக்கும் ஆலுவா முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கிறது.

summary

Manju Warrier sues Sanal Kumar Sasidharan for defamation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments