முகப்பு
செய்திகள்

லப்பர் பந்து திரைகள் அதிகரிப்பு!

லப்பர் பந்துக்கு கூடுதல் திரைகள்...

Updated On : 21 செப்டம்பர், 2024 at 1:23 PM
பகிர்:

லப்பர் பந்து படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் திரைகள் அதிகரித்துள்ளன.

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மையக் கதாபத்திரமாக நடித்துள்ளனர். இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில், இப்படமே பரிந்துரை பட்டியலில் இருப்பதால் பல திரையரங்குகளில் படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்!

முழு கட்டுரையைப் படிக்க →