FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மூழ்கிய டைட்டானிக் கப்பலுக்குக் கிடைத்த காப்பீடு எவ்வளவு?

மூழ்கிய டைட்டானிக் கப்பலுக்குக் கிடைத்த காப்பீடு பணம் பற்றிய தகவல்கள்...

மூழ்கிய டைட்டானிக் - file photo
பகிர்:

டைட்டானிக் கப்பல் மூழ்கியதால், அதன் சொந்த நிறுவனத்துக்குக் கிடைத்த இழப்பீட்டுத் தொகை பற்றி தகவல், சுமார் 115 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது.

டைட்டானிக் கப்பலின் காப்பீட்டு ஆவணம் 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் வகையில், விபத்து நேரிடுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது.

தற்போது, இந்த காப்பீட்டு அவணம் பிரிட்டன் நாட்டில் ஏலத்துக்கு வந்துள்ளது. இது பல கோடிக்கு ஏலம் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மூழ்கவே மூழ்காது என்ற விளம்பரத்துடன் பயணத்தைத் தொடங்கிய சொகுசு கப்பலான டைட்டானிக், முதல் பயணத்தின்போதே பனிப்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாக மூழ்கியது.

இந்த விபத்து நேரிட்டு வெறும் 30 நாள்களுக்குள், கப்பல் நிறுவனத்தின் உரிமையாளருக்கு முழு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த கப்பலில் சென்று பலியானவர்களின் குடும்பத்தினர் பல காலம், இழப்பீட்டுத் தொகைக்காகக் காத்திருந்த நிலையில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

காப்பீட்டுத் தொகை ரூபாய் மதிப்பில் ரூ.47 கோடி அளவுக்கு கப்பல் நிறுவனத்துக்குக் கிடைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. டைட்டானிக் கப்பலில் 2,224 பேர் இருந்துள்ளனர். அதில் வெறும் 20 உயிர்காக்கும் படகுகள் மட்டுமே இருந்துள்ளன. அதில் 1,178 பேர் தப்பியிருக்கிறார்கள். 1500 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்த கப்பல் விபத்து, கடலில் நடந்த மிகப்பெரிய விபத்து மற்றும் மிகப்பெரிய காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அந்த ஆவணங்கள் ஏலத்தில் விடப்பட்டு, அதுவும் மிகப்பெரிய தொகையை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

How much insurance money was received for the sunken Titanic ship?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.