சந்தீப் இயக்கும் பிரபாஸின் படத்தில் பாலிவுட் தம்பதியர்?
பாலிவுட் பிரபலங்களான சயிஃப் அலி கான், கரீனா கபூர் சந்தீப் வங்கா இயக்கும் பிரபாஸின் ஸ்பிரீட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் சந்தீப் வங்கா இயக்கும் பிரபாஸின் ஸ்பிரீட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாவதும் பொது மக்களிடையே வரவேற்பைப் பெறுவதும் வசூலில் அசத்துவதும் வழக்கமாகிவிட்டன.
அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தெலுங்கில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்!
தற்போது, பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவரா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ள சயிப் அலிகானுக்கு மீண்டும் ஒரு தெலுங்கு படம் அமைந்திருக்கிறது.
நடிகை த்ரிஷாவும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் தேவரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சந்தீப் வங்கா பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் கல்கி படத்துக்குப் பிறகு தி ராஜா சாப், பௌஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு ஸ்பிரிட் படத்தில் நடிப்பார்.
இந்தப் படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக பிரபாஸ் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் பிரபாஸ் தவிர வேறு யார் நடிக்கிறார்களென படக்குழு இதுவரை எதுவும் தெரிவிக்கவிக்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.