கூடுதல் கவனம் பெற்றவர்...
பாலிவுட் திரை நட்சத்திரங்களில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர்.
பாலிவுட் திரை நட்சத்திரங்களில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர். 2000-ஆம் ஆண்டு ஜே.பி. தத்தா இயக்கத்தில் வெளியான "ரெஃப்யூஜி' திரைப்படம் மூலம் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக தனது 19-ஆவது வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
தற்போது, மேக்னா குல்சார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "தாயரா' என்ற த்ரில்லர் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பாடல்களே இல்லாத இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.