கேம் சேஞ்சர் அப்டேட்!
ஷங்கர் - ராம் சரண் படத்தின் அப்டேட்...
Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:40 AM
நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.
இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
Advertisement
Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:42 AM
முன்னதாக, தமன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலின் புரமோ வருகிற செப். 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடல்களைத் தொடர்ந்து விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படம் டிச. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.