’என்னை அறிந்தால்..’: அருண் விஜய் நெகிழ்ச்சி!
என்னை அறிந்தால் படத்தால்தான் எல்லாம் கிடைத்ததாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் - என்னை அறிந்தால். 2015-ல் வெளியானது. அஜித்தின் முக்கியமான திரைப்படம் என்கிற அளவுக்குப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக, இப்படத்தில் விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கும் திருப்புமுனைப் படமாக இது அமைந்தது.
இந்நிலையில், என்னை அறிந்தால் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி, ரசிகர் ஒருவர் ‘விக்டர் வெறும் கதாபாத்திரம் மட்டுமல்ல. திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக பிணைத்த ஒன்று.’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கருப்பு வெள்ளை வடிவில் வெளியாகும் பிரம்மயுகம்!
அதைப் பகிர்ந்த அருண் விஜய், ‘எல்லாமே இங்கிருந்துதான் துவங்கியது’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘மிஷன்’ திரைப்படம் 25-வது நாளை நிறைவு செய்து வெற்றிப்படமாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.