விடாமுயற்சியைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!
விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையைப் பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், விடாமுயற்சியின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் சாட்லைட் மற்றும் இசை உரிமையை சன் டிவி, சோனி மியூசிக் ஆகியவை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.