அயலான் மேக்கிங் விடியோ!
அயலான் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 4 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம், விஎஃப்எக்ஸ் பணிகளை நம்பியே உருவாக்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான அயலான் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கலவையான விமர்சனங்களையே படம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பெரியாரை அவமரியாதை செய்ததா உதயநிதியின் நிறுவனம்?
இந்நிலையில், இப்படத்தின் 20 நிமிட மேக்கிங் விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அயலானை உருவாக்க படக்குழு மேற்கொண்ட சிரமங்களையும், உழைப்பையும் இதில் பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.