கங்குவா படத்தின் பாபி தியோல் போஸ்டர்!
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் வில்லன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி(நடராஜ்) நடித்துள்ளனர்.
அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையும் படிக்க: இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்: கமல்ஹாசன்
Advertisement
Advertisement
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நாளை (ஜன.27) காலை 11 மணிக்கு உதிரன் போஸ்டர் வெளியாகுமென ப்டக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் பாபி தியோலின் போஸ்டர்தான் உதிரன் எனும் பெயரில் வெளியாகவிருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.