விமல் - யோகிபாபு கூட்டணியில் 'கரம் மசாலா'!
விமல் - யோகிபாபு நடிக்கும் புதிய படம் தொடர்பாக...
விமல் - யோகிபாபு கூட்டணியில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் விமல், பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
இவர் நடித்த விலங்கு இணையத் தொடரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக விமல் நடிப்பில் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை, சார் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஓம் காளி ஜெய் காளி இணையத் தொடர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததுள்ளது.
இந்த நிலையில், அப்துல் மஜித் எழுதி இயக்கும் புதிய படத்தில் விமல் நடிக்கிறார். இப்படத்துக்கு கரம் மசாலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பைஜு ஜேகம் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவை கே. ராகுல் மேற்கொண்டுள்ளார். நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கரம் மசாலா திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஒவ்வொரு வலியும் பாடம்... சோகத்தை புன்னகையுடன் பகிர்ந்த சிறகடிக்க ஆசை நாயகி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.