ஒன் பேட்டல் ஆஃப்டர் அனதர் படத்தின் போஸ்டர். 
செய்திகள்

லியோனார்டோ டிகாப்ரியோவின் புதிய பட அப்டேட்!

ஆஸ்கர் வென்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்...

DIN

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ’ஒன் பேட்டல் ஆஃப்டர் அனதர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லெஜண்டரி இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர்ஸ் ப்ரோஸ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது.

டைட்டானிக் திரைப்படம் மூலம் உலக அளவில் இன்றும் டிகாப்ரியோ பேசப்பட்டு வருகிறார். தமிழ் டப்பிங்கில் இவரது பல படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன.

ஆஸ்கர் விருதுக்கு ஏழு முறை தேர்வாகி அதில் ஒருமுறை வென்றுள்ளார். டிகாப்ரியோ நடிப்பில் கடைசியாக 2023இல் கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் பல்வேறு முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

அமெரிக்க நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தப் படம் திரையரங்குகளில் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் நலம் குன்றிய பெண் காட்டு யானை உயிரிழப்பு

ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி பட்டமளிப்பு விழா

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

சதுரகிரி பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT