இளையராஜா இசையமைத்த மராத்தி படமான கோந்தல் 2027 ஆஸ்கருக்கு தேர்வு!
2027 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது போட்டிக்கு இளையராஜா இசையமைத்த “கோந்தல்” படம் தேர்வு...
2027 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க இளையராஜா இசையமைத்த “கோந்தல்” எனும் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையில், இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான மராத்திய திரைப்படம் “கோந்தல்”. மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க “கோந்தல்” திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று (செப். 18) அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இதுவரை ஹரிஷ்சந்திரச்சி ஃபேக்டரி (2009), ஸ்வாஸ் (2005), கோர்ட் (2015) ஆகிய 3 மராத்தி மொழிப் படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The film "Gondhal," featuring music composed by Ilaiyaraaja, has been selected to compete for the 2027 Oscars.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.