கீதா கோவிந்தம் படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்த ரஷ்மிகா மந்தனா.  படங்கள்: இன்ஸ்டா / ரஷ்மிகா மந்தனா.
செய்திகள்

நம்பவே முடியவில்லை... ரஷ்மிகா உற்சாகம்!

நடிகை ரஷ்மிகா மந்தனா பதிவிட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ரஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக ரஷ்மிகா நடித்த படம்தான் கீதா கோவிந்தம்.

பரசுராம் இயக்கிய இந்தப் படம் 2018, ஆக.15-இல் வெளியானது. நேற்று அதன் 7-ஆவது ஆண்டை முன்னிட்டு நடிகை ரஷ்மிகா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் இந்தப் படத்தில் இருந்துதான் காதலித்ததாக நம்பப்படுகிறது.

இருவருமே இது குறித்து அதிகாரபூர்வமாக இதை அறிவிக்காத நிலையில், விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்மிகா தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

7 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் புகைப்படங்களை வைத்துள்ளேன் என்பதை நம்பவே முடியவில்லை. கீதா கோவிந்தம் எப்போதுமே சிறப்பான படம்தான்.

இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைத்து பார்க்கிறேன். நாங்கள் எல்லாம் சந்தித்து நீண்டநாள்கள் ஆகின்றன. ஆனால், அனைவரும் நன்றாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.

7 ஆண்டுகள் ஆகியதை நம்பவே முடியவில்லை. ஆனால், கீதா கோவிந்தமின் 7 ஆண்டுகளுக்காக மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actress Rashmika Mandanna has shared photos from the film Geetha Govindam and posted them in a touching manner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT