எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்: ரஷ்மிகா மந்தனா
எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பது குறித்து ரஷ்மிகா....
எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பது குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.
மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் கதையில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தை கௌதம் தின்னுரி இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.
சென்னையில் நேற்று (செப். 16) நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து இத்திரைப்படத்தை தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
நிகழ்வில் பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா, ''எனக்கு தற்போது என்னுடைய மனதில் ஒரே ஒரு உணர்வுதான் இருக்கிறது. அது நன்றி உணர்வுதான். எம். எஸ். அம்மாவின் சிறப்பு நாளான இன்று நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருப்பது சந்தோஷமாக உள்ளது. இதற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் எம். எஸ். அம்மா. இன்று நாங்கள் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். இதை பார்த்து இந்த அரங்கத்தில் எங்கேனும் அமர்ந்து ரசிப்பீர்கள் என்றும் உங்களிடத்தில் சிறிய அளவில் புன்னகை இருக்கும் என்றும் நம்புகிறோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு எழும்.
அம்மா, உங்களுடைய வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவராக இருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம் - சதாசிவம் சாரின் (எம்எஸின். கணவர்) ஆசீர்வாதம் - சண்முக வடிவு அம்மாவின் ஆசிர்வாதம்- உங்களுடைய குடும்பம் மற்றும் உங்களுடைய நலம் விரும்பிகளின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் எங்களுக்கும், எங்கள் குழுவினருக்கும் தேவை. என்னுடைய சிறந்த பங்களிப்பை இந்த படைப்பிற்காக வழங்குவேன் என உறுதி கூறுகிறேன்'' என்றார்.
Actress Rashmika Mandanna has spoken about playing the role of M.S. Subbulakshmi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.