FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரபஞ்சமே செய்த செயல்... படப்பிடிப்பில் நடந்த காயத்தினால் கணவருடன் ஓய்வெடுக்கும் ரஷ்மிகா!

நடிகை ரஷ்மிகா மந்தனா தனது காயம் குறித்து கூறியிருப்பதாவது...

18 வினாடிகள் முன்பு
கணவருடன் ஓய்வெடுக்கும் ரஷ்மிகா மந்தனா. - படம்: இன்ஸ்டா / ரஷ்மிகா மந்தனா.
பகிர்:

நடிகை ரஷ்மிகா மந்தனா படப்பிடிப்பில் ஏற்பட்ட தனது காயம் குறித்து நேர்காணல் ஒன்றில், “தற்போதுதான் கணவருடன் நேரம் செலவிட முடிகிறது” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் மைசா என்ற படத்தில் கதைநாயகியாக நடிகை ரஷ்மிகா நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளால் உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. 

கதைநாயகியை மையமாக எடுக்கப்படும் இந்தப் படத்தில் கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மைசா உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கேரளத்தின் அதிரப்பள்ளியின் காட்டுப்பகுதியில் மைசா படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும்நிலையில், ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பில் ரஷ்மிகா நடனமாடும்போது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஷ்மிகாவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முழுமையாக குணமடைய 6 வாரங்களுக்குக் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். வருகிற நவ. 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டில் ஓய்வெடுத்துவரும் ரஷ்மிகா தனது நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது:

திருமணத்துக்குப் பிறகு மூன்று மாதங்களாக நாங்கள் சந்தித்துக்கொள்ளவே இல்லை. தொலைப்பேசியில் மட்டுமே பேசி வருகிறோம். அமைதியாக இரு, உன்னை வீட்டில் வைத்திருக்கிறேன் என பிரபஞ்சமே என்னிடம் சொல்வது போலிருக்கிறது. இதுதான் நாங்கள் திருமணத்துக்குப் பிறகு அதிக நேரம் ஒன்றாக இருக்கிறோம். வித்தியாசமாக இருக்கிறது ஆனாலும் நன்றாக இருக்கிறது.

இந்த ஓய்வு எங்கள் இருவர் குறித்து அதிகமாகப் புரிந்துக்கொள்ள உதவியுள்ளது. விஜய்க்கு சீரியஸான படங்கள் பிடிக்கும்; எனக்கு கொரியன் டிராமாக்கள் பிடிக்கும். தற்போது எனது கணவரையும் எனக்குப் பிடித்த சீரியல்களைப் பார்க்க வைத்துவிட்டேன். அடுத்த முறை காயம் ஏதுமில்லாமல் இந்த மாதிரி ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்றார்.

summary

Rashmika Mandanna on how hip injury gave her more time with Vijay Deverakonda: 'The universe said…'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments