பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!
டைஸ் ஐரே படத்தின் டீசர் வெளியீடு...
பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.
இந்த நிலையில், டைஸ் ஐரே படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பேய்ப்படமாக உருவான இதன் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
pranav mohanlal's dies irae movie teaser out now
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.