FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இது கோழைத்தனம்! சின்மயி மன்னிப்புக்குக் காட்டமான மோகன். ஜி!

சின்மயி மன்னிப்பு கேட்டதால் மோகன். ஜி எதிர்வினையாற்றியுள்ளார்...

Updated On : 2 டிசம்பர் 2025, 12:42 pm IST
சின்மயி, மோகன் ஜி
பகிர்:

இயக்குநர் மோகன். ஜி பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டதற்காக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடலான எம்கோனே பாடலைச் சின்மயி பாடியிருந்தார்.

இதன் புரோமோ வெளியானதும் ரசிகர்கள், “பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர் மோகன். ஜி திரைப்படத்திற்கு ஏன் பாடினார்? எனக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

Advertisement

Advertisement

இதனைக் கவனித்த சின்மயி, “இந்தப் பாடலைச் சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போதுதான் அறிந்துகொள்கிறேன். முன்பே இதை அறிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன்.” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இயக்குநர் மோகன். ஜி, “என் திரைப்படத்தில் ஒரு கருத்து பதிவாகிறது என்றால், அது என்னுடைய சொந்தச் சிந்தனை மட்டும்தான். அதற்காக, நீங்கள் என்னைக் குறி வைக்கலாம். அதைவிடுத்து, என் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைத் தாக்குவது என்பது கோழைத்தனமானது” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், ரசிகை ஒருவர், “மோகன். ஜி இது உங்களுக்கு ஒரு பாடம். சின்மயி போன்ற விஷ வஞ்சகர்களைத் தவிருங்கள். உங்களுக்கு வேறு நல்ல பாடகியே கிடைக்கவில்லையா?” என்றார்.

அதற்கு மோகன். ஜி, “உண்மையில், நான் கலைஞர்களிடம் வேறுபாடுகளைப் பார்க்கும் ஆள் இல்லை. என் நாட்டை, மொழியை, கலாசாரத்தை நேசிக்கிறேன். அதனையே என் படங்களில் கூறுகிறேன். இந்தத் தடைகள் என்னை தடுக்காது. நீங்கள் சொன்னதைக் குறித்து ஆலோசிக்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.

director mohan. g puts a post about chinmayi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments