களம்காவல் படத்தில் விநாயகன், மம்மூட்டியின் போஸ்டர்.  படங்கள்: எக்ஸ் / மம்மூட்டி கம்பெனி.
செய்திகள்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படம் ரூ.75 கோடியை தாண்டியதாகப் படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

தடைகளைத் தாண்டி மக்களின் மனதை வென்றதாகப் படக்குழு விடியோவில் தெரிவித்துள்ளது.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜிதின் கே.ஜோஷ் இயக்கத்தில் கடந்த டிச.5ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது.

இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இதில் பல நடிகைகள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதுவரை ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

The film crew has released a video stating that actor Mammootty's film 'Kalamkaaval' has crossed ₹75 crore at the box office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

திற்பரப்பு அருகே இளைஞா், தொழிலாளி தற்கொலை

இன்றைய மின்தடை

வேன் மோதி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மரணம்

தில்லியில் நீா் தேங்குதலும், மாசுவும் பாரம்பரிய பிரச்னைகள்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT