தி ராஜாசாப் படத்தின் விடியோ பாடல்!
தி ராஜாசாப் படத்தின் புதிய விடியோ பாடல் குறித்து...
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜாசாப் படத்தின் ’சஹானா சஹானா’ விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.
Advertisement
Advertisement
சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல், கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.
தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார்.
ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவான இப்படம் அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சஹானா பாடலில் நிதி அகர்வாலும் பிரபாஸும் நடன அசைவுகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து சந்தீப் வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
The video song from actor Prabhas's upcoming film 'RajaSaab' has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.