சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து!
சிவகார்த்திகேயனின் கார் விபத்து...
நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திரைப்படத்திலும் வெங்கட் பிரபு படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் முன்னாள் சென்ற கார் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால், சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட போக்குவரத்து காவலர்கள் இரு கார்களையும் ஓரம்கட்டி விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, காரிலிருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனும் காவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நல்வாய்ப்பாக லேசான விபத்து என்பதால் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.