அஜித் குமார் 
செய்திகள்

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் கலந்துகொண்டு சொல்லதக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இதற்கிடையே, பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் ரேசிங் பயணம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இதன் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதால் ஆவணப்பட வெளியீடு நல்ல வரவேற்பைப் பெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல தொடர் நடிகர்!

2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5,000 வழங்க வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

2025-ல் அறிமுகமான சின்ன திரை தொடர்கள்!

காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 638 புள்ளிகளுடனும், நிஃப்டி 206 புள்ளிகளுடனும் நிறைவு!

SCROLL FOR NEXT