மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இப்படத்தில், இவருக்கு மனைவியாக நடிகை விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை பாணியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிடில் கிளாஸ் திரைப்படம் ரூ. 65 லட்சம் வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மிடில் கிளாஸ் திரைப்படம் நாளை(டிச. 24) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the film 'Middle Class', starring Munishkanth and Vijayalakshmi, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.