எச். வினோத் படம் - எக்ஸ்
செய்திகள்

மலேசியா முருகன் கோயிலில் எச்.வினோத் சாமி தரிசனம்!

மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் ஜனநாயகன் திரைப்பட இயக்குநர் எச்.வினோத் சாமி தரிசனம் செய்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் ஜனநாயகன் திரைப்பட இயக்குநர் எச்.வினோத் சாமி தரிசனம் செய்தார்.

இயக்குநர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் ஜனநாயகன் திரைப்படம் உருவாக்கியுள்ளது. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியா மணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதன் பிறகு விஜய் படத்தில் நடிக்கமாட்டார் என்பதால், அவரை இசை வெளியீட்டு விழாவைக்கான 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். ரசிகர்கள் முன்னிலையில் விஜய் ஆடிப் பாடியதால் உற்சாகமாக இசைவெளியீட்டு விழா நடந்து முடிந்தது.

நிகழ்ச்சி முடிந்து விஜய் மலேசியாவில் இருந்து புறப்பட்ட நிலையில், இயக்குநர் எச்.வினோத் தனது குழுவுடன் பத்துமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Jananayagan director H. Vinoth visits the Murugan temple in Malaysia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித்ஷாவும், சிதம்பரமும் ஒரு குரலில் பேசுவது வியப்பளிக்கிறது:

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: தமாகாவினா் அன்னதானம்

பங்குச்சந்தை வா்த்தகத்தில் இழப்பு: இளைஞா் தற்கொலை

தருமபுரியில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை

தருமபுரியில் இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

SCROLL FOR NEXT