வயலின் எல்லாம் ரெடியா..? ரெட்ரோ முதல் பாடலின் புரோமா!
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.
ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மே. 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ’கண்ணாடி பூவே’ காதலர் நாளை முன்னிட்டு பிப். 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
தற்போது இந்தப் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. அதில் சந்தோஷ் நாராயணன், “வயலின் எல்லாம் ரெடியா, ஷாட் போலாம்” எனக் கூறுவதாக விடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடலையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.