FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காவலரா? ரௌடியா? எதிர்பார்ப்பைத் தூண்டும் மம்மூட்டி!

மம்மூட்டி - விநாயகன் படம் குறித்து...

Updated On : 16 பிப்ரவரி 2025, 12:57 pm IST
பகிர்:

நடிகர் மம்மூட்டியின் புதிய பட பெயர் போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் மம்மூட்டி - விநாயகன் நடித்துள்ள புதிய படத்தை துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது.

இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலகியதாகத் தகவல்.

Advertisement

Advertisement

இப்படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்மூட்டி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு களம்காவல் எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கான, போஸ்டர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காரணம், இப்படத்தில் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாகவோ, ரௌடியாகவோ நடித்திருக்கலாம் என்பதால் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் அவரை திரையில் காண்பது நல்ல அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments