முகப்பு
செய்திகள்

மோகன்லாலின் லூசிஃபர் திரைப்படம் மறுவெளியீடு!

நடிகர் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி 2025, 8:55 pm IST
'லூசிஃபர்’ மோகன்லால்
பகிர்:

நடிகர் மோகன்லால் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிஃபர் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

பிரபல மலையாள நடிகரான ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படம் 'லூசிஃபர்'.

இந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி பல மொழிகளில் கடந்த 2019 அம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

200 கோடியைத் தாண்டி வசூல் செய்த இந்தப் படம் மலையாள திரையுலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்டது.

முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகும் எம்புரான் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் கேரள முதல்வராக நடித்துள்ளார். படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

எம்புரான் திரைப்படம் வருகிற மார்ச் 27 அன்று வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகமான லூசிஃபர் திரைப்படத்தை மார்ச் 20 அன்று மறுவெளியீடு செய்வதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments