முகப்பு
செய்திகள்

சப்தம் மேக்கிங் விடியோ வெளியீடு!

சப்தம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி 2025, 5:49 pm IST
சப்தம் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் அறிவழகன், நடிகை லட்சுமி மேனன், நடிகர் ஆதி.
பகிர்:

நடிகர் ஆதி, லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

தமன் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மாயா மாயா’ கடந்த வாரம் வெளியானது.

ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நாளை (பிப். 28) திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மேக்கிங் விடியோ படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.