ஆர்வமூட்டும் பிரம்மாண்டம்... கேம் சேஞ்சர் டிரைலர்!
கேம் சேஞ்சர் டிரைலர் வெளியானது...
கேம் சேஞ்சர் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
Advertisement
இதையும் படிக்க: சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி டிரைலர்!
இந்த நிலையில், இன்று இப்படத்தின் தெலுங்கு டிரைலரை வெளியிட்டுள்ளனர். அரசியல் பின்னணி கொண்ட கதை, வசனங்கள், காட்சிகளின் பிரம்மாண்டம் என கேம் சேஞ்சர் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.