முகப்பு
செய்திகள்

ரசிகை பலியான விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி 2025, 5:48 pm IST
அல்லு அர்ஜுன்
பகிர்:

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

அவரின் 8 வயது மகன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அசோக் ரெட்டி, அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்னதாக, ஹிந்தி திரைப்படமான ரயீஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தில் வாதங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்தன. இந்தச் சம்பவத்தில் நடிகர் மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று அசோக் ரெட்டி எடுத்துரைத்தார்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அவரின் வழக்குரைஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இருவருக்கும் தலா ரூ.50,000 ஆக மொத்தம் ரூ.1 லட்சம் பிணைத் தொகையாக அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments