லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் நாயகி இவரா?
லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் புதிய அப்டேட்...
நடிகர் அல்லு அர்ஜுனின் 23-வது திரைப்படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகி கவனத்தைப் பெற்றது. அனிருத் இசையமைத்த பின்னணி இசையும் வைரலானது. ரூ. 700 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத்தில் உள்ளார். அங்கு, படப்பிடிப்பு திட்டங்கள் மற்றும் எழுத்து பணிகளும் நடைபெற்று வருகிறதாம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார். மேலும், கூலி திரைப்படத்தில் மோனிகா பாடலுக்கும் சிறப்பு நடனமாடியிருந்தார்.
Information regarding the female lead of actor Allu Arjun's 23rd film has been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.