FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறுவெளியீடாகும் அர்ஜுன் ரெட்டி திரைப்படம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் குறித்து...

26 வினாடிகள் முன்பு
அர்ஜுன் ரெட்டி படத்தின் காட்சி. - படம்: அமேசன் பிரைம் விடியோ.
பகிர்:

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறுவெளியீடாகும் என இயக்குநர் சந்தீப் வங்கா உறுதியளித்துள்ளார்.

இயக்குநர் சந்தீப் வங்கா தனது முதல் படமான அர்ஜுன் ரெட்டி படத்தினை தனது சொந்த தயாரிப்பில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இதனை ஹிந்தியில் அவரே ரீமேக் செய்தார். பின்னர், அனிமல் படம் இயக்கினார். அந்தப் படம் ரூ.900 கோடி வசூலித்து அசத்தியது.

Advertisement

Advertisement

தற்போது சந்தீப் வங்கா மற்றும் அவரது சகோதரர் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரோமாஞ்சகம் என்ற தெலுங்கு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை வேணு கோபால் இயக்கியுள்ளார்.

காதல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சுமந்த் பிரபாஸ், அனந்திகா சனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் பட விழாவில் பேசிய இயக்குநர் சந்தீப் வங்கா பேசியிருப்பதாவது:

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. பத்தாம் ஆண்டில் அதன் நீக்கப்பட்ட காட்சிகளுடன் நிச்சயமாக மறுவெளியீடாகும். இன்னும் நேரம் இருப்பதால் அதற்கான பணிகளை பின்னர் தொடங்குவோம் என்றார்.

summary

Arjun Reddy to be re-released with deleted scenes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments