சிக்மா மிக ஜாலியான ஜென்ஸி திரைப்படம்: சந்தீப் கிஷன்
சந்தீப் கிஷன் சிக்மா குறித்து பேசியுள்ளார்...
நடிகர் சந்தீப் கிஷன் சிக்மா திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
லைகா புரடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர்கள் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று (செப். 8) நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு பேசிய நடிகர் சந்தீப் கிஷன், "இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இந்தப் படத்தில் உழைத்திருக்கிறார். 'சிக்மா' மிக ஜாலியான ஜென்ஸி திரைப்படம். உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தைப் பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போலதான் 'சிக்மா' படத்திற்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் நேர்மையாக உழைத்துள்ளனர். நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும்". என்றார்.
Advertisement
Advertisement
நடிகை ஃபரியா அப்துல்லா, " தயாரிப்பாளர்கள் சுபாஸ்கரன் மற்றும் தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். ஃபிலிம் மேக்கிங், சினிமா மீது சஞ்சய்க்கு அதிக ஆர்வம் உண்டு. ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். சந்தீப் கிஷனை இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்". எனக் கூறினார்.
Actor Sundeep Kishan has spoken about the movie Sigma.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.