நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் கரிகாலா!
சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் கரிகாலா என்கிற பான் இந்தியத் திரைப்படம் உருவாகி வருகிறது.
மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பான் இந்திய படமான மைக்கேல் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
ஆனாலும், தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ள நடிகராகவே திகழ்கிறார். இந்த நிலையில், இயக்குநர் உகந்தர் முனி இயக்கத்தில் கரிகாலா என்கிற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படுகிறது. முதல் பாகம் 2027 ஜூலை 2 ஆம் தேதியும் இரண்டாம் பாகம் அக். 28, 2027 அன்றும் வெளியாகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். மாயக்கதையாக இது உருவாகிறது.
A pan-Indian film titled Karikaala starring actor Sundeep Kishan, is currently in the making.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.