FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அவர் முதல்வர் ஆனதை நம்ப முடியவில்லை: அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்வர் விஜய் குறித்து பேசியுள்ளார்...

நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்வர் விஜய்
பகிர்:

நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்வர் விஜய் குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். தற்போது, இவர் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

புரமோஷ்னகளுக்காக நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய அர்ஜுன் தாஸ், “முதல்வன் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, அதில் சித்திரிக்கப்பட்டுள்ள நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நம்பமுடியாதவையாகத் தோன்றுகின்றன.

Advertisement

Advertisement

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் சாருக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்பது எனக்கு உண்மையாகவே தெரியாது. ஆனால், திடீரென அவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆனதும் என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாவில் அவ்வளவு பெரிய நாயகனான அவர் தற்போது முதல்வராக மாறிவிட்டார். இது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது"

Actor Arjun Das's remarks about Chief Minister Vijay have garnered attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments