முகப்பு
செய்திகள்

குளிர்பானத்தை தடை செய்ய மாட்டீர்கள்.. நான் விளம்பரத்தில் நடிக்கக் கூடாதா? வைரலாகும் ஷாருக் கான் பேச்சு

குளிர்பானம் கெடுதல் என்றால் தடை செய்யுங்கள் என ஷாருக் கான் கோரிக்கை..

Updated On : 3 ஜனவரி 2025, 2:28 pm IST
ஷாருக் கான் - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ஷாருக்கான் பேசினாலே சர்ச்சையாகும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், அதுபோலத்தான் அவர் குளிர்பானம் தொடர்பாகப் பேசியிருப்பது போது வைரலாகி வருகிறது.

குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குளிர்பானத்துக்கு ஆதரவான விளம்பரங்களில் நடிப்பது குறித்து ஷாருக் கான் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

அதாவது, மக்களுக்குக் கெடுதலான பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யாமல், அதில் நடிக்கும் பிரபலங்களை மட்டும் விமர்சிப்பதற்கு எதிராக ஷாருக் கான் கருத்து அமைந்துளள்து.

Advertisement

Advertisement

அது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என்றால், கண்டிப்பாக குளிர்பானங்கள் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இந்த விடியோ அவர் இப்போது பேசியதல்ல, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006ஆம் ஆண்டு அவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் விடியோ இப்போது வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது.

இது குறித்து அவர் பேசுகையில், விளம்பரத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். இதுபோல நானும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கெடுதல் என்றால் அதற்கு தடை விதியுங்கள். நமது நாட்டில் அதனை விற்பனை செய்யக் கூடாது, குழந்தைகளுக்குக் கெடுதல் என்றால் தடை விதியுங்கள். சிகரெட் கெடுதல் என்றால் நமது நாட்டில் சிகரெட் தயாரிப்பதற்கு தடை விதியுங்கள். நமது நாட்டு மக்களுக்கு அது கெடுதல் என்றால் உடனடியாக அதற்குத் தடை விதியுங்கள். ஆனால் அது போன்ற பொருள்களின் உற்பத்தியை தடை செய்ய மாட்டீர்கள். ஏன் என்றால் அது அரசுக்கு வருவாய். அப்படியென்றால் என் வருவாயையை தடை செய்யாதீர்கள். நான் ஒரு நடிகர். நான் ஒரு வேலையை செய்கிறேன், அதன் மூலம் சம்பாதிக்கிறேன். நான் ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன், ஒரு பொருள் கெடுதல் என்றால் அதற்குத் தடை விதியுங்கள். அதனால் எந்த பிரச்னையும் இல்லை என்று 18 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருப்பது இப்போது வைரலாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments