செய்திகள்

மெட்ராஸ்காரன் டிரைலர்!

மெட்ராஸ்காரன் படத்தின் டிரைலர் வெளியானது...

DIN

நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ்காரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

எஸ்ஆர் புரடக்‌ஷன் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, திரில்லர் டிராமாவாக உருவான திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நிஹாரிகா கொனிடேலா நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன. 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT