முகப்பு
செய்திகள்

வசூல் வேட்டையில் கேம் சேஞ்சர்: முதல்நாள் வசூல் விவரம்!

நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

Updated On : 11 ஜனவரி, 2025 at 10:49 AM
கேம் சேஞ்சர் போஸ்டர்.
பகிர்:

நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நேற்று (ஜனவரி 10 ) திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Advertisement

நேற்று வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.

முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 186 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நீண்ட நாள்கள் காத்திருப்புக்குப் பின்னர் வெளியாகும் ஜேம் சேஞ்சர் ரான் சரணுக்கு மிகப் வெற்றியை தருமென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தியன் -2 தோல்வியிலிருந்து ஷங்கர் தப்பித்துவிட்டாரா என்பது இன்னும் சில நாள்களில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.