செய்திகள்

குடும்பஸ்தன் வெளியீட்டுத் தேதி!

குடும்பஸ்தன் படத்தின் வெளியீட்டுத் தேதி...

DIN

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளைத் தேடும் நடிகரான மணிகண்டன் இப்படத்திலும் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் ஜன. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

டிப்ஸ்... டிப்ஸ்...

அரச இலைக் கொழுந்து துவையல்

புடலங்காய் தோசை

அவல் லாடு

SCROLL FOR NEXT