FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அஜித் பங்கேற்கும் அடுத்த ரேஸ் - இந்த முறை போர்ச்சுகலில்!

போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸ் தொடரில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார்.

Updated On : 17 ஜனவரி 2025, 7:48 pm IST
நடிகர் அஜித் குமார்
பகிர்:

நடிகர் அஜித் குமார் போர்ச்சுகலில் நடைபெற இருக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் நாளை கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து ’அஜித் குமார் ரேசிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினர் கலந்துகொண்டார்.

அங்கு நடைபெற்ற 911 ஜிடி3 ஆர் என்கிற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தினர். குழு சார்பாக இந்தப் பந்தயத்தில் அஜித் ஓட்டிய கார் ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றிக்கு இந்தியாவிலிருந்து சினிமா உள்பட பல துறை சார்ந்த பிரபலங்கள் அஜித் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக போர்ச்சுகலில் நடைபெறவுள்ள தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் ‘அஜித்குமார் ரேசிங்’ குழு கலந்துகொள்ள இருப்பதாகவும், இதற்காக ரேசிங் பயிற்சியாளர் மாத்யூ டெட்ரியை போர்ச்சுகல் சென்று அஜித் நேரில் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டிகள் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகின்றன.

பயிற்சியாளர் மாத்யூ டெட்ரியுடன் அஜித்குமார்

அஜித் பயிற்சியாளரைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்த அஜித்தின் குழுவினர், “தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ன் முதல் சுற்றுக்காக போர்ச்சுகலின் போர்டிமாவோ பந்தய சுற்றுப் பகுதியில், கார் ஓட்டுநர் பயிற்சியாளர் மாத்யூ டெட்ரியுடன் அஜித்குமார். அஜித்தின் கார் பந்தய பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் மாத்யூ பொறுப்பேற்றுள்ளார்” எனப் பதிவிட்டிருந்தனர்.

துபையில் நடைபெற்ற 24 ஹெச் கார் பந்தயத்தின் போது பந்தய சீசன் முடியும் வரை எந்த படங்களிலும் கையெழுத்திடப் போவதில்லை என்றும், கார் பந்தய சீசன் தொடங்குவதற்கு முன்பு அக்டோபர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிப்பேன் என்றும் அஜித் கூறியிருந்தார்.

அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப். 6 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ ஏப்ரல். 10 அன்று வெளியாகவுள்ளது.

கார் ரேஸ் மற்றும் திரைப்படம் தொடர்பாக அஜித் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments