முகப்பு
செய்திகள்

ராமம் ராகவம் வெளியீட்டுத் தேதி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராமம் ராகவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி 2025, 5:41 pm IST
ராமம் ராகவம் போஸ்டர்
பகிர்:

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராமம் ராகவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி, வட சென்னை ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற சமுத்திரக்கனி அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தினார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். 

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகி வருகிறது.

ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு  நடைபெற்றன.

இந்த நிலையில் வரும் பிப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.